ஈராக்கில் நூலகங்களை இலக்குவைக்கும் ஐஎஸ் ஆயுததாரிகள்!
ஈராக்கின் மோசுல் நகரை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் போராளிகள் நகரில் உள்ள நூலகங்களை இலக்கு வைத்துள்ளதாக வடக்கு ஈராக்கிலிருந்து வரும் தகவல்...


ஈராக்கின் மோசுல் நகரை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் போராளிகள் நகரில் உள்ள நூலகங்களை இலக்கு வைத்துள்ளதாக வடக்கு ஈராக்கிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாதத்தின் முற்பகுதியில் மோசுல் நகரின் மத்திய நூலகத்திலிருந்த இரண்டாயிரம் நூல்களை ஆயுததாரிகள் அகற்றியுள்ளதாக ஏபி செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புத்தகங்களை விடுத்து தத்துவம், கலாசாரம், விஞ்ஞானம் மற்றும் வேறு துறை சார்ந்த நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த நூல்கள் மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்துவதாகவும், அவை எரிக்கப்படும் என்றும் உள்ளூர் மக்களிடம் ஆயுததாரிகள் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மோசுல் பல்கலைக்கழக நூலகத்தின் நூல்களும் தீயில் வீசப்பட்டுள்ளன.