பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகள் விரைவில் கைது செய்யப் படவுள்ளதாகத் தெர...

பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகள் விரைவில் கைது செய்யப் படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கடந்த அரசாங்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான அமைச்சர் ஒருவர், இரண்டு நிறுவனத் தலைவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதேவேளை புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை வெகு விரைவில் தீர்மானிக்க நேரிடும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவுமே ஜே.வி.பி ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது
நல்லாட்சியை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப காலம் தாழ்த்தப் போவதில்லை என ஜே.வி.பி மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.