500 குழந்தைகளை கடத்தி தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
ஈராக்கை சுற்றி உள்ள பகுதிகளில் 500 குழந்தைகளை கடத்தி தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். உள்ளூர...

![]() |
ஈராக்கை சுற்றி உள்ள பகுதிகளில் 500 குழந்தைகளை கடத்தி தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறிய தகவல் படி தீவிரவாத குழு குழந்தைகளை தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக் மேற்கு மாகாணமான அன்பர் மாகாணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 400 குழந்தைகளை கடத்த திட்டமிடபட்டு உள்ளதாக அன்பார் மாகாண சபை உறுப்பினர் பர்கான் மொகமத் கூறி உள்ளார். கடந்த ஒரு வாரத்தில் ஈராக்கின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வீடுகள், அர் ருபதா பள்ளிகள் அல் குயிம், அனஹ் மற்றும் ராவா ஆகிய பகுதிகளில் இருந்து 16 வயதுக்கு கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு உள்ளனர். என் ஈராக் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். தியாலோ போலீஸ் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் அல் ஷைதி கூறும் போது சிறுவர்களை தற்கொலை படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்துவதாக கூறினார்.மேலும் அவர் கூறும் போது அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் குடும்பத்தில் உள்ள குழந்தை பருவதினரை 100க்கும் மேற்பட்டவர்களை கடத்தி ஈராக்கிய படைகளுடன் போரிட வைத்து உள்ளனர். என ரஹாப் அல் அபுதா ஈராக் பெண்கள் பாராளுமன்ற குழு தலைவர் கூறினார். அவரது அறிக்கை வந்த பிறகு மொசூலில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 120 குழந்தைகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர்.அல் குயாராஹ், அல் ஷூரா ,பாடூஷ், மற்றும் அல் -பாஜி நகரங்களின் அருகாமை பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டு குட்டி முகாம்களுக்கு கொண்டு செல்லபட்டு உள்ளனர். |