ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி வாங்குவதற்காக கொழும்பிலுள்ள சாதாரண கடைத்தொகுதிக்கு சென்றமை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி வாங்குவதற்காக கொழும்பிலுள்ள சாதாரண கடைத்தொகுதிக்கு சென்றமை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
விற்பனை நிலையத்திற்குச் சென்ற மைத்திரி அந்த நிலையத்தில் உள்ள கதிரையொன்றினில் அமர்ந்து பாதணிகளை தெரிவு செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அவருடை பாதுகாவலர்கள் இன்றி அந்த விற்பனை நிலயத்திற்குச் சென்றமை முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண மக்களை போன்று கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
சிறிலங்காவில் அரசியல்வாதிகளை இவ்வாறு பொது இடங்களில் காண்பது மிகவும் அரிது.
ஒரு காலத்தில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அதன் உறுப்பினர்கள் ரயில்களில் கொழும்பு வந்து, நடந்து சென்றனர்.
இந்த நிலையில், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது போன்ற முன்னுதாரணத்தை வழங்க முயற்சித்திருக்கலாம் அவதானிகள் கூறியுள்ளனர்.