பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி மைத்திரி
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரா...

போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஆறாவது வெற்றி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மாத்திரமே நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அர்ப்பணித்து உழைத்த அரச தலைவர்கள் சகலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தங்களை அர்பணித்த, உயிர்தியாகம் செய்த முப்படையினர்களுக்கும், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறினார்.
மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கிவிட்டு திறமையாக மற்றும் சாதாரணமாக செயற்படுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டும் இணைந்து முன்னெடுக்கப்படல் வேண்டும்.
தேசிய பாதுகாப்புக்காக முன்னெடுக்கவேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்வதாகவும், புதிய தேசிய பாதுகாப்பு திட்டமும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டேன். பாதுகாப்பு படைகளின் மனித வளங்கள் மேம்படுத்தப்படும் என்பதுடன் பௌதீக வளங்களும் பெற்றுகொடுக்கப்படும் என்றும் கூறினார்.
நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுடிய அனைத்தையும் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு அத்தியாயத்துக்கான பக்கம் ஆரம்பிக்கப்படுகின்றதெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.