போர் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்காத மஹிந்த
போர் வெற்றியின் ஆறாமாண்டு கொண்டாட்ட நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்தறை நடைபெற்று வருகிறது. எனினும் இந்த நிகழ்வில் முன...


போர் வெற்றியின் ஆறாமாண்டு கொண்டாட்ட நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்தறை நடைபெற்று வருகிறது.
எனினும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.