பெண்ணொருவர் மீது பொலிஸார் கொடூர தாக்குதல்! யாழில் சம்பவம்

 யாழில் பெண்ணொருவர் மீது பொலிஸார் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விசாணை ஒன்றுக்க...

 யாழில் பெண்ணொருவர் மீது பொலிஸார் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 விசாணை ஒன்றுக்காக அழைக்கப்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
 யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
 இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு ஒன்றினையடுத்து குறித்த பெண் மீது மற்றொருவர் முறைப்பாடு செயதுள்ளார்.
 இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
 இந்த விசாரணைக்கான கடிதமும் முறைப்பாடு செய்தவரிடமே பொலிஸாரினால் கொடுக்கப்பட்டு சம்பந்தப்ட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.
 இறுதி நேரத்தில கிடைத்த அழைப்பையடுத்து குறித்த பெண் நேற்று நண்பகல் 12 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
உரிய நேரத்துக்கு விசாரணைக்காக வருகை தராமையினால் ஆத்திரமடைந்த பொலிஸார் பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 அழைப்புக் கடிதம் தாமதமாக கிடைத்தமையால் தான், பொலிஸ் நிலையம் வர நேரமாகியுள்ளதாக குறித்த பெண் விளக்கமளித்துள்ளார். 
 இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கதிரையிலிருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
 இதனைத் தொடர்ந்து ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் பெண்ணின் தலைமயிரைப் பிடித்திழுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
 கதறக்கதற தாக்குதல் நடத்திய பொலிஸார் பெண்ணை சிறைக்கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

Related

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தன் மட்டுமே பொருத்தமானவர்! - முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கை தமிழரசுக்கட்சியே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும். நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு அமைய சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவருக்கு மிகப்பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மகிந்த தோல்வியடைவார் என்று கூறிய போது பசில் ஏற்கவில்லை! - ரெஜினோல்ட் கூரே

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என ஆதாரத்துடன் கூறிய போதிலும், மஹிந்தவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என சிவில் விமான சேவைகள...

கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை! - அம்பாறையில் சுரேஸ் எம்.பி.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்தாக முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய் என்றும், போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இதுவரை எதுவுமே வழங்கப்படவில்லை என்பது இங்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item