கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை! - அம்பாறையில் சுரேஸ் எம்.பி.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்தாக முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய் என்றும், போரினால் இடம் பெயர்ந்...


கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்தாக முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய் என்றும், போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இதுவரை எதுவுமே வழங்கப்படவில்லை என்பது இங்கு நேரில் வந்து பார்த்த போதுதான் தெரியவந்ததாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்தாக முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய் என்றும், போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இதுவரை எதுவுமே வழங்கப்படவில்லை என்பது இங்கு நேரில் வந்து பார்த்த போதுதான் தெரியவந்ததாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். அதன்போது 4 ஆம் கொலனி வளத்தாப்பிட்டி, தம்பிலுவில் போன்ற கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர். அவர்களை முன்னாள் எம்.பி. குணசேகரம் சங்கர் வரவேற்று அப்பகுதி களைக் காண்பித்தார். வளத்தாப்பிட்டி பளவெளிக்கிராம சிவன் கோவில் முன்றலில் மக்கள் தலைவர் த. துரைசிங்கம் தலைமையில் கூட்டமொன்று கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கில் மட்டும்தான் மீள்குடியேற்றம் நடக்கவில்லை மாறாக கிழக்கில் மீள்குடியேற்றம் முடிவடைந்துவிட்டது என்ற தவறான செய்தி சர்வதேசமெங்கும் திட்டமிட்டு முன்னைய அரசாங்கத்தால் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு நேரடியாக விஜயம் செய்து பார்த போதுதான் தெரிய வந்தது கிழக்கில் பல தமிழ்க் கிராமங்கள் இன்னும் மீள்குடியேற்றம் நடக்காமலுள்ளன. பாதி குடியேறிய பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் மீண்டும் அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

நாம் எல்லைக்கிராம மக்களின் நலன்களை கவனிக்க வேண்டிய கடமைப்பாடுள்ளவர்களாகவுள்ளோம். எனவே அவை தொடர்பான தரவுகளைச் சேகரித்து முழுமையான அறிக்கைகளை தந்தால் நாம் உள்ளூரிலோ, வெளிநாடு களிலோ, அரசாங்கத்துடனோ, நிறுவனங் களுடனோ பேசும்போது அதற்கான உதவிகளைப் பெற்றுத்தர முடியும். பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரூடாக சரியான தகவல்களைப் பெறலாமென்று நாம் நம்பவில்லை.

இங்கு பலதரப்பட்ட பிரச்சினைகளை நேரடியாகக் கண்ணுற்றோம். நானும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யும் இவற்றைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். இங்கு நிலம் சூறையாடப்பட்டிருக்கிறது. தொல்பொருள் புதைபொருள் என்று கூறி மக்களது காணிகளுக்கு எல்லைக்கற்கள் போடப் பட்டுள்ளன. இங்கும் அதைக்காண்கின்றோம்.

தமிழ் மக்களாகிய நாம் என்றுமில்லாதவாறு இந்த ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் கொணர்ந்தவர்கள். எனவே எமது பிரச்சினைகளை உரிமையோடு எடுத்துச் சொல்ல எமக்கு அருகதை உண்டு. அவர்களுக்கு அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடும் உண்டு.எமது பிரச்சினைகளை புதிய அரசாங்கத்திடம் தெரிவிப்போம். அவற்றைத் தீர்த்து வைப்பார்களென்று நம்புவோம்.

துரதிஷ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான தமிழ் எம்.பி. அரசுடன் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டார். எந்த மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதனைச் செய்யாமல் தன்னை வளர்த்துக் கொண்டார். அப்படிப்பட்டவர்களை எதிர்காலத்தில் தெரிவு செய்யாமல் மக்களுடன் நிற்கக்கூடிய தலைவர்களை இனங்கண்டு பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அதனூடாக தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

வடக்கிலிருந்து நாம் இருவரும் நேரடியாக வந்து உங்களுடைய பிரச்சி னைகளை தேவைகளை நேரில் கண்டறிய வேண்டும் என்பதற்காக நேற்று திருகோணமலைக்கும் இன்று அம்பாறைக்கும் நாளை மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்கின்றோம். வடக்கு மட்டுமல்ல கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் நேரடியாக கண்ணுற்று சர்வதேசத்திற்கு வெளிக்கொணர்வதே எமது நோக்க மாகும். உங்களது பிரச்சினைகளை நாம் வெளி உலகிற்கு வெளிக்கொணர்வோம். எனவே, உங்களது பிரச்சினைகளை தரவுகள் ரீதியாகத் தரவேண்டும் என்றார்

Related

இலங்கை 8807751825725659336

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item