மகிந்த தோல்வியடைவார் என்று கூறிய போது பசில் ஏற்கவில்லை! - ரெஜினோல்ட் கூரே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என ஆதாரத்துடன் கூறிய போதிலும், மஹிந்தவும், முன்னாள் அமைச்சர் பசில...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோல்வியடைவார் என நிச்சயமாக தெரிந்திருந்தும் நான் அவருடன் இணைந்திருந்து பிரச்சாரம் செய்தேன். ஏனெனில், கீழ் மட்ட மக்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இவ்வாறு செய்தேன். கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து சில காலங்களாகவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். எனினும், ஆட்சியாளர்கள் அதனை திருத்திக் கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.