இலங்கையின் தீர்மானத்தை, ஏற்றுக்கொள்ள சீனா மறுப்பு.
கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகர் (போட்சிட்டி) திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தும் இலங்கையின் தீர்மானத்தை சீனா ஏற்றுக்கொள்ள மறு...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_95.html

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகர் (போட்சிட்டி) திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தும் இலங்கையின் தீர்மானத்தை சீனா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யங், இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,
குறித்த திட்டம் சீனாவை காட்டிலும் இலங்கைக்கே அதிக முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர சீனாவுக்கு சென்றிருந்தபோதும் இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் முதலீடுகளை கருதி இலங்கையின் புதிய அரசாங்கம், போட் சிட்டி திட்டத்தின் இடைநிறுத்தலை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate