ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்

  சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். சுவிசின் துர்கவ்(Thurgau)பகுதியை சேர்ந...

 
சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.
சுவிசின் துர்கவ்(Thurgau)பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறிய இத்தம்பதியினர் சுவிசில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இணையதளம் மூலமாக அந்த நபர், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, ஜிகாதியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன்பின் தனது கர்ப்பிணி மனைவியை விடுத்து, துருக்கி வழியாக சிரியாவிற்கு பறந்த அவர், அல்கொய்தா இயக்கத்தின் al-Nusra Front என்ற பிரிவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் கணவனை தேடி கடந்த அக்டோபர் மாதம் அப்பெண் சிரியாவிற்கு சென்றுள்ளார்.
ஆனால் தன் மனைவியை சிறைபிடித்த அந்நபர், தற்போது தாக்குதல்கள் அதிகம் நடக்கும் Idlib பகுதியில் அவரை பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அப்பெண் தன் பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நாடு திரும்ப எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் என்னுடைய கணவன் என்னை சிறைபிடித்துள்ளார்.
எனவே என்னை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுங்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சிகள் சுவிட்சர்லாந்த் மற்றும் ஜேர்மனியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் பரபரப்பாக ஒளிப்பரப்பின.

Related

வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்

மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர...

‘விசா’ வாங்குவதற்காக மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர்: விருப்பம் நிறைவேறியதும் நிகழ்ந்த விபரீதம்

பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்காக அந்நாட்டை சேர்ந்த மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர் ஒருவர் இரண்டு வாரங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதால், மூதாட்டி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இங்கிலாந...

(படங்கள்) சீனாவில் பொலிஸார் முஸ்லிம்கள் மோதல். 15 முஸ்லிம்கள்,18 பொலிசார் பலி.

சீனாவின் ‘சின்ஜியாங் பிராந்தியத்தில் ரமழான் நோன்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து சோதனைச் சாவடியில் இருக்கும் பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோதலில் இது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item