கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கு அடித்துக்கொள்வோர் எமது கட்சியில் கிடையாது: கரு ஜயசூரிய
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கு அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூர...


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கு அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்புக்கள் அதிகார மோகத்தில் கட்சிக்கு உள்ளேயே மோதிக் கொள்கின்றன. இவ்வாறான ஓர் கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படவில்லை. தாம் செய்த குற்றங்களை மூடி மறைப்பதே கட்சிகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
ஜனவரி மாதம் 8ம் திகதி எடுக்கப்பட்ட மதிநுட்பமான தீர்மானத்தை மக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு மேலும் அதிக அதிகாரங்களை வழங்குவதே மக்களின் எண்ணமாகும் என அமைச்சர் கரு ஜயசூரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று தெரிவித்துள்ளார்.