பாடசாலை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்: மஹிந்த
பாடசாலை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_473.html

பாடசாலை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் கைத்தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2013ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சகல பட்டதாரிகளுக்கும் அரசாங்க வேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது ஆட்சிக் காலத்தில் 2012ம் ஆண்டு வரையில் உள்ளக மற்றும் வெளிவாரி பட்டங்களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 12 லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் 180 நாட்களில் சகலவிதமான அபிவிருத்திப் பணிகளையும் முடக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் வெலிகம, திக்வல்ல நகரங்களில் ஆற்றிய உரைகளின் போது மேற்கண்ட கருத்துக்களை மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate