அத்துமீறும் மீனவர்களை சுட்டுக்கொல்வோம்! ரணில் அதிரடி
அத்து மீறல்களில் ஈடுபட்டால் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தி...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_280.html

அத்து மீறல்களில் ஈடுபட்டால் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பிற்குள் அத்து மீறக் கூடாது.
எனது வீட்டுக்குள் எவரேனும் அத்து மீறி பிரவேசித்தால் என்னால் சுட்டு கொல்ல முடியும், சட்டத்தில் அதற்கு இடமுண்டு.
இது எங்களது கடல் யாழ்ப்பாண மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.
மீனவர்கள் மீது சுடுவது மனித உரிமை மீறலாகாதா என ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரணில், ஏன் மீனவர்கள் அத்து மீறி பிரவேசிக்க வேண்டுமமென கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டால் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.