சீனாவை விட்டுக்கொடுக்க முடியாமல் தடுமாறும் சிறிலங்கா
சீனாவை பகைத்துக் கொண்டு மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணப் போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவை பகைத்துக் கொண்டு ...


சீனாவை பகைத்துக் கொண்டு புதிதாக மேற்குலக நாடுகளுடன் உறவுகளை பேணவில்லையென பிரதி வெளிவிவகார அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் சீனாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
பாகிஸ்தான், சீனா, ரஸ்யா மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அணிசேரா கொள்கைகளையே சிறிலங்கா பின்பற்றி வருவதாகவும் எந்தவொரு நாட்டையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.