சொத்து முழுவதையும் நன்கொடையாக அளித்தார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்
தனது சொத்து முழுவதையும் நன்கொடையாக வழங்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக். இத்தகவலை...


இத்தகவலை பார்ச்சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவரது 78.50 கோடி டாலர் சொத்தை தனது 10 வயது உறவுக்கார சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லு மாறு திட்டமிட்டுள்ளார் குக். இவருக்கு திருமணமாகவில்லை.
பார்ச்சூன் பத்திரிகை மதிப் பீட்டின்படி டிம் குக் வசம் உள்ள ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகள் அடிப்படையில் அவரது சொத்து 12 கோடி டாலராகும். அத்துடன் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளின் மதிப்பு 66.50 கோடி டாலராகும்.
54 வயதாகும் டிம் குக், அறக் கட்டளைகளுக்கு அதிக நன் கொடை அளிக்கும் பெரும் பணக் கார கொடையாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
தொழிலதிபர் வாரன் பஃபெட், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மற்றும் ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் ஆகியோர் அறக்கட்டளைகளுக்கு அதிகம் அளிக்கும் பட்டியலில் உள்ளனர். இப்பட்டியலில் இப்போது டிம் குக் சேர்ந்துள்ளார்.
பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் ஆகியோரைப் போல அறக்கட் டளைகளுக்கு அளிக்காமல் தனது நன்கொடைகளை தனித்துவமாக அளிக்க விரும்புவதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களைப் போல தான் அளிக்கும் நன்கொடை விவரத்தை டிம் குக், தனது இணையதளத்தில் வெளியிடுவதில்லை.
இருப்பினும் சமீப காலமாக இவர் சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை குறித்து அதிகம் பேசி வருகிறார்.
குறிப்பிட முடியாத பணி களுக்கு தொடர்ச்சியாக நன் கொடை கிடைப்பதை தொடர்ந்து செய்து வருவதாக அவரே தெரிவித் துள்ளார்.