எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு?
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடுமென நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வாரங்களில் பொரு...


அவ்வாறு பெயரிடத் தவறினால், நாடாளுமன்றில் விசேட வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதன் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகள் குறித்து சபாநாயகர் அரசியல் சாசன சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தனியாக அழைத்து அவர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆளும்கட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகிறது.