கார் சக்கரத்தால் இழுத்துச் செல்லப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் ( VIDEO)
மாவனெல்ல – மின்னேரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் ...


கார் ஒன்றில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த விபத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளியில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் காரின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
பாரிய விபத்தாகப் பதிவாகியுள்ள போதும், குறித்த சக்கரத்தில் சிக்கிய இருவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
காணொளியில் காண்க…(newsfirst)