கருத்து முரண்பாடால் ஒருவர் அடித்துக் கொலை
கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இருவருக்கு இடையில் ...


நேற்று இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 45 வயதான ஒருவர் கைதாகியுள்ளதோடு, அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.