சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை
கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நட...


கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பதிவுக் காலம் முடிவடைந்ததன் பின்னரும் சிலர் நீண்ட காலம் சட்ட விரோதமான முறையில் கொரியாவில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொரியாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையினால் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.