மொஹான் பீரிஸினால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை:பிரதமர்(video இணைப்பு)

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் எவ்விதமான சந்தேகங்களும் ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ர...

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் எவ்விதமான சந்தேகங்களும் ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (30) தெரிவித்தார்.

அத்துடன், அரசியலமைப்பின் 107(2) பிரிவைக் கவனத்திற்கொள்ளும் போது சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் தீர்மானம் மேற்கொண்டு ஜனாதிபதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், இதனால் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமை அதிகாரமற்ற விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொஹான் பீரிஸினால் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புகளின் செல்லுபடித் தன்மை தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியரசர் ஒருவரை நியமிக்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு குறைபாட்டின் அடிப்படையிலோ உயர் நீதிமன்றத்தின் ஏதேனும் ஒரு நடவடிக்கையாலோ வழக்கு நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாகாது என குறிப்பிட்டார்.

இதனால், உயர்நீதிமன்றத்தினால் கடந்த இரண்டு காலத்திற்குள் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் சந்தேகமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

[youtube https://www.youtube.com/watch?v=SgrYr2X0ol0]

Related

இலங்கை 7744251261247691040

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item