சர்ச்சைக்குரிய உமாஓயா திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

உமாஓயா திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்...

சர்ச்சைக்குரிய உமாஓயா திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

உமாஓயா திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றாடல் பாதிப்புகளை தவிர்க்கக்கூடிய வழிமுறையின் கீழ், இந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டார்.

உமாஓயா திட்டம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக அதுகுறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான சர்ச்சை காரணமாக இந்த திட்டத்திற்கான நிதியுதவியை ஈரானிடமிருந்து பெற்றுக்கொள்வதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 4186961892854014182

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item