கஹவத்தை: பாதுகாப்பு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்

கஹவத்தை நகரின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கஹவத்தை நகரில் சுமார் ...


கஹவத்தை: பாதுகாப்பு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்

கஹவத்தை நகரின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கஹவத்தை நகரில் சுமார் 60 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

நகரில் நேற்றும் (29) சிலர் குழுக்களாக சிறிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையிலான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதுதவிர, இரத்தினபுரி பிராந்திய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் கஹவத்தை நகரில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related

தலைப்பு செய்தி 8801929300786474237

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item