மகிந்த ராஜபக்ச என்ற வார்த்தை இனி அரசியலில் உச்சரிக்கப்படாது

மகிந்தவின் கதை முடிந்துவிட்டதென்கிறார் ரணில். இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபகச என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப...



மகிந்தவின் கதை முடிந்துவிட்டதென்கிறார் ரணில்.

இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபகச என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்துள்ளார்.

ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தை மாது­லு­வாவே சோபித தேரர் ஆரம்­பித்­தி­ருக்­கா­விடின் இன்று நாட் டில் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை தொடர்ந்தும் தக்­க­வைக்க வேண்­டு­மாயின் மாது­லு­வாவே சோபித தேரரின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் எனவும் கூறியுள்ளார்.

மாது­லு­வாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்­னிட்டு சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்-

‘மாது­லு­வாவே சோபித தேரரின் ஜன­நா­யகப் போராட்டம் இன்­னொரு யுத்­தத்­துக்கு சம­மா­ன­தாகும். நாட்டின் விடு­த­லையை வென்­றெ­டுக்க அன்று ஆயுதம் மூலம் போரா­டி­யதைப் போல இன்று நாட்டின் ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்ப வார்­தைகள் மூல­மா­கவும் அஹிம்­சையின் மூல­மா­கவும் போராடி எமக்கு ஜன­நா­ய­கத்தை வென்று கொடுத்­துள்ளார்.

சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்­தி­னூ­டாக கடந்த சில ஆண்­டு­க­ளாக சோபித தேரர் மக்­க­ளுக்­காக போரா­டி­யி­ருந்தார். இந்த போராட்­டமே இன்று நாட்டில் மூவின மக்­க­ளையும் ஒற்­று­ப­டுத்­தி­யுள்­ளது. நாட்டில் விவாதம் செய்­வ­தற்கும், கட்­சி­களை விமர்­சிக்­கவும், மூவின மக்­களும் தமது உரி­மை­களை வென்­றெ­டுக்­கவும் இந்த போராட்டம் சாத­க­மாக அமைந்­து­விட்­டது. நாம் அனை­வரும் கட்சி சார்பில் பிரிந்­தி­ருந்­தாலும் ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தில் ஒன்­றி­ணைய மது­ளு­வாவே சோபித தேரரே கார­ண­மாகும்.

அதேபோல் எமது தேசிய அர­சாங்­கத்­துக்­கான போராட்­டத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன எனும் நல்ல மனிதர் எமக்கு கிடைத்­துள்ளார். இது­வரை எந்தத் தலை­வரும் செய்ய விரும்­பாத தியா­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­துள்ளார். அவரின் மூல­மா­கவே எமக்கு இன்று நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது. அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க உள்­ளிட்ட முக்­கி­ய­மான சிலரின் உத­வியும் நாட்­டுக்­காக அவர்கள் செய்த தியா­கமும் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். எனினும் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உரு­வாக்க மாது­லு­வாவே சோபித தேரர் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கா­தி­ருந்தால் இன்று நாம் இந்த விடு­தலைக் காற்றை சுவா­சித்­தி­ருக்க முடி­யாது.

இன்று நாம் நல்­ல­தொரு அர­சியல் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்தப் பயணம் நாட்டில் நிரந்­த­ர­மாக அமைய வேண்டும். ஆனால் அதை சீர­ழிக்கும் வகையில் ஒரு­சில சக்­திகள் இன்றும் முயற்­சித்து வரு­கின்­றது. மஹிந்த ராஜபக்சவின் சர்­வா­தி­கார யுகம் கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுடன் முடி­வுக்கு வந்­து­விட்­டது. இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த என்ற பெயர் இனிமேல் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜனா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே இனிமேல் நிலைத்­தி­ருக்கும். எவ­ரேனும் அதை சீர்­கு­லைக்க முயற்­சித்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக நிலைநாட்டும் வகையில் இந்த அரசாங்கதின் செயற்பாடுகள் அமையும். மூவின மக்களையும் ஒன்றிணைத்து அமைதியான ஆட்சியை கொண்டு செல்ல மாதுலுவாவே சோபித தேரர் போன்ற மனிதர்களின் துணை தொடர்ந்தும் இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.

Related

பசிலின் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது...

இன்று கூட்டமைப்பினருடன் மைத்திரி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க...

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாரில்லை: மகிந்த

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item