ராஜித்த தேசியப்பட்டியலில்! மகன் கொழும்பு மாவட்டத்தில்!
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ள நிலையில், அவரின் புதல்வர் ச...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_612.html
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ள நிலையில், அவரின் புதல்வர் சதுர சேனாரத்ன கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜித்த சேனாரத்ன ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜித்த சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவிற்கு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.