பாணந்துறை நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகளிடையே மோதல்(video )
பாணந்துறை நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் நிர்வ...


இந்த மோதலில் நிர்வாக அதிகாரிகள் இருவரும் நகர சபை உறுப்பினர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மோதலில் காயமடைந்தவர்கள் களுத்துறை, நாகொடை மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நகர சபையின் செயலாளரை நீக்குவது தொடர்பில் முன்மொழிவைக் கொண்டுவருவதற்குத் தயாரான சந்தர்ப்பத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.