ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஆகும் மொபைல் போனுக்கான பேட்டரி வடிவமைப்பு (video)
ஒரே நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் (மின்னூட்டம்) செய்துகொள்ளும் மொபைல் போன்களுக்கான பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அலுமின...


அலுமினியத்தாலான இந்த பேட்டரியை ஸ்டேன் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளைப் போலன்றி, இவை பாதுகாப்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லித்தியம் பேட்டரிகள் அவ்வப்போது வெடித்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன.
அலுமினியம் தீப்பிடிப்பதில்லை, அலுமினியத்தின் விலை மிகவும் குறைவு என்பதால், இந்த பேட்டரிகள் மலிவானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மின்சாரத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையும் அலுமினியத்துக்கு அதிகம்.
பொதுவாக மொபைல் போன்களின் பேட்டரிகளை மின்னூட்டம் (சார்ஜ்) செய்வதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த பேட்டரி இதுவரை இல்லாத வேகத்தில் மின்னூட்டம் பெறுகிறது