போர்க்குற்றவாளி கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சியில் ரணில்! பின்னணி என்ன?
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டிய...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_271.html

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாயவை காப்பாற்றும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரணில் தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோத்தபாயவை மூன்று நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் கோத்தபாயவை காவலில் வைத்து விசாரணை செய்வதற்குப் பதிலாக ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரணில் கோரியுள்ளார்.
காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
வழங்கு விசாரணை தொடர்பில் கோத்தபாயவை, பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சட்டமா அதிபரிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரவிருந்த நிலையில், ரணில் தடுத்து நிறுத்தியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்வை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வது அரசுக்கு புதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என ரணில் அச்சம் கொண்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்வை காவலில் வைத்து விசாரணை செய்வதை தவிர்த்து, ஏனைய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
அதையடுத்தே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கோத்தபாய ராஜபக்ச உட்பட 4 பேரது கடவுச் சீட்டுக்களையும் முடக்கி வைப்பதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.