அனைவரையும் கவரவேண்டும்: மகனை கொன்று பேஸ்புக்கில் வெளியிட்ட கொடூர தாய்
பேஸ்புக்கில் அனைவரின் கவனத்தையும் கவருவதற்காக பெற்ற மகனை கொலை செய்த தாயிற்கு நீதிமன்றம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்கா...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_605.html

அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தை சேர்ந்தவர் (Lacey Spears – Age 27). இவருக்கு Garnett என்ற 5 வயது மகன் இருந்துள்ளான்.
இவர், கடந்த 2014ம் ஆண்டு தனது மகனுக்கு அதிக அளவு உப்பை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதனால், கார்னெட்டின் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.
இடையில் தனது மகன் நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வருவதாக உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றி, அனுதாபங்களை பெற்று வந்துள்ளார்.
மேலும், கொலை பழி தன் மீது விழாதவாறு, தனது குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வருவதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதேபோல், தொடர்ந்து இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை கழிவறையில் கூட மருத்துவர்களுக்கு தெரியாமல் கார்னிட்டிற்கு அதிக அளவு உப்பை கொடுத்துள்ளார்.
இதற்கிடையே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் அதிக அளவு சோடியம் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே லேஸியின் கைப்பேசியை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.
அதில், குழந்தையை சந்தேகமில்லாமல் கொல்வது எவ்வாறு? என அவர் இணையதளத்தில் தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து, தாயாரை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி Robert Neary, லேஸி செய்தது மன்னிக்க முடியாத கொடூர குற்றம் என்றும் கடந்த 5 வருடங்களாக குழந்தையை சித்ரவதை செய்த கொன்ற குற்றத்திற்காக அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குழந்தையின் தாயார் ஒரு வித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தண்டனையை 15 வருடங்களாக குறைக்க வலியுறுத்தி லேஸியின் வழக்கறிஞர் மறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன