ரணிலின் விஜயத்தின் பின்னர் வடக்கில் கல்வி அபிவிருத்தி: அகிலவிராஜ்
அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பாடசாலைகளில்...


நேற்று நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட வர்த்தமானி மூலம் அறிவித்து கல்வி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
யுத்த காலத்தின்போது அர்ப்பணிப்புடன் வட மாகாணத்தில் சேவையாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களையும் தொண்டர் ஆசிரியர்களையும் தேர்வு பரீட்சைகள் மூலம் மிகவிரைவில் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மலையகத்தில் கணித விஞ்ஞான தொடர்பாக 23 பாடசாலைகளும் சங்கீதம் நடனம் தோடர்பாக ஒரு பாடசாலையும் விளையாட்டுத்துறை அபிவிருத்திகாகாக ஒரு பாடசாலையை தரமுயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
மிகவிரைவில் இவை அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்