இலங்கையின் அசாதாரண மாற்றம் ஒரு சிறந்த சந்தர்ப்பம்!- அமெரிக்கா
இலங்கையின் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை தமிழ் சிங்கள புதுவருடம் குறித்து நிற்பதாக ஐக்கிய மெரிக்கா தெரிவித்துள்ளது தமிழ் சிங்கள் பு...

தமிழ் சிங்கள் புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தமது வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதுவருடம், பிரதிநிதித்துவத்தை மாற்றி நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்துக்கான சந்தர்ப்பத்தை புதுப்பித்துள்ளது என்றும் கெரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி ஒபாமாவின் சார்பில், இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்தில் உள்ள புலம்பெயர் இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கெரி குறிப்பிட்டுள்ளார்.