ஊழல், மோசடி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமில்லை : பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானம்
ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டிய...

இதற்கு பதிலாக திறமைமிக்க புத்திஜீவிகளை அரசியல் நடவ டிக்கைகளுக்கு உட்படுத்தி அவர்களைத் தேர்தலில் போட்டியிட வைக்க இரு கட்சிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபடமுடியாதவாறு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச சபைகள் முதல் பாராளுமன்றம் வரை சகல உறுப்பினர்களதும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியொன்றை தயாரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.