குர்ஆனை எரித்த பெண்ணை அடித்து தீயிலிட்ட பொதுமக்கள்
புனித நூலான குர்ஆனை எரித்த27 வயது பெண்ணுக்கு ஆப்கானிஸ்தானில் மக்கள் எரித்துக் தண்டனை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டின் தலை...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_621.html
புனித நூலான குர்ஆனை எரித்த27 வயது பெண்ணுக்கு ஆப்கானிஸ்தானில் மக்கள் எரித்துக் தண்டனை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த நாட்டின் தலைநகரான காபூலில் நடந்துள்ளது. புனித நூலான குர்ஆனை எரித்த பார்குந்தா என்ற அந்த பெண்ணை மரகட்டைகளை கொண்டு சிலர் அடிக்க மற்றவர்கள் கை கால்களால் அடித்து உதைத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அப்படியும் ஆத்திரம் தீராத மக்கள் அவரது உடலை அருகில் இருந்த ஆற்றுக்கு எடுத்து சென்று தீயிட்டு எரித்துள்ளனர்.
பின்னர் உடலை ஆற்றின் சகதியில் போட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து பெண்ணின் உடலை மீட்டனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட பெண் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்று அப்பெண்னின் பெற்றொர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பாக 4 பேரை கைது செய்து இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்..
இதுபற்றி ஆசியாவிற்கான மனித உரிமை கண்காணிப்பகத்தின் பொறுப்பாளர் கூறுகையில் இதை நாங்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்போம் என்று தெரிவித்துள்ளார்..