வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அரசுடன் இணைந்து செயற்படுவோம்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை கட்டம் கட்டமாக அகற்றினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_299.html

இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக இன்றைய சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றி படையினரை வெளியேற்றுவதாக உறுதியான வாக்குறுதியொன்றை வழங்கினால், அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்ததாகவும், இதனால் வடக்கு வாழ் தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது