இனவாதி ஒருவருடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்க உள்ளதாக!!
சிறிலங்காவில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில், எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற வ...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_35.html
சிறிலங்காவில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில், எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடைபெற்ற வழமையான தேர்தல்களை காட்டிலும் இந்த முறை தேர்தல் மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா நிறைவேற்று ஜனாதிபதியாக இரு தடவை ஆட்சி செய்த மஹிந்த, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அனைத்து தரப்பினராலும் இதனை மையப்படுத்தியே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒரு முறை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனவாதத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்க போவதில்லை என்று மைத்திரி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது அரசியல்வாதிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் மைத்திரி மீண்டும் ஆற்றவுள்ள உரையின் மூலம் மஹிந்தவுக்கு எதிராக பாரிய தாக்குதலை தொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் இந்த உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வீதம் பாரியசரிவை சந்திக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மைத்திரி - மஹிந்த அரசை உருவாக்க போவதாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மஹிந்த தெரிவித்து வருகிறார்.
இனவாதிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை எனவும் மஹிந்த கூறி வருகிறார். இந்த நிலையில், தான் இனவாதி ஒருவருடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்க உள்ளதாக பேசப்படுகிறது.