தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சமூக வலைத்தளங்கள்!
பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரை...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_76.html
பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவு பெற வேண்டும். எனினும் சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ருவிட்டர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. |