ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் கொலையே என்று பொலிஸ் தீர்மானம்

ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் கொலை என்பதை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் இதன்படி விசாரணைகள் முடிவுறுத்தப்ப...

ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் கொலை என்பதை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்
இதன்படி விசாரணைகள் முடிவுறுத்தப்பட்;டு அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

2012ம் ஆண்டு மே 17ம் திகதியன்று கிருலப்பனையில் வைத்து சுவர் ஒன்றில் தாஜூதீனின் கார் மோதிய நிலையில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே வெளியான மருத்துவ அறிக்கையிலும் இந்த மரணம் தற்செயலாக இடம்பெற்றது அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதில் சில மருத்துவ சாட்சியங்கள் குறைவாகவே இருந்தன.

இந்தநிலையிலேயே தற்போது அனைத்து தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் தாஜூதீனின் மரணம் கொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜூதீனின் கொலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் மத்தியிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Related

தலைப்பு செய்தி 3765907707891661077

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item