ஜப்பானில் பணியாளரை விற்ற மேஜர் ஜெனரல்
பணியாளர் ஒருவரை மேஜர் ஜெனரல் ஒருவர் 70,000 யென்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகத்தில்...


ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகத்தில் கடயைமாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஒருவரே இவ்வாறு, தனது பணியாளரை அந்நாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார்.
பதவிக் காலம் முடிவடைந்து நாடு திரும்பும் முன்னர்ää தனது பணியாளரை 70,000 யென் கூலி அடிப்படையில் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார் வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய இந்த மேஜர் ஜெனரல் ஜப்பானில் இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
குறித்த மேஜர் ஜெனரல், இராஜதந்திர கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி கனிஸ்ட படைவீரர் ஒருவரை தனது பணியாளராக அழைத்துச் சென்றிருந்தார்.
நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தில் 70,000 யென்களை தமக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற உடன்படிக்கை அடிப்படையில் குறித்த பணியாளரை ஜப்பானிலேயே விட்டுவிட்டு, மேஜர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பினால், பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென ஜப்பான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு குறித்த கனிஸ்ட இராணுவச் சிப்பாய்க்கு மேஜர் ஜெனரல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த அனைத்து விபரங்களையும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு குறித்த இராணுவச் சிப்பாய் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகள் ஜப்பான் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை தூதரக சேவையின் இராஜதந்திரியொருவர் மாதாந்த கூலி அடிப்படையில் தமது பணியாளாரை விற்பனை செய்த முதல் சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.