இரண்டாவது உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானியக் கப்பல் கண்டுபிடிப்பு

இரண்டாவது உலகப் போரின்போது, 70 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானிய போர்க் கப்பலான முசஷியை கடலடியில் கண்டுபிட...

இரண்டாவது உலகப் போரின்போது, 70 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானிய போர்க் கப்பலான முசஷியை கடலடியில் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்கக் கோடீஸ்வரர் பால் ஆலன் அறிவித்துள்ளார்.
இதுவரை கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலேயே மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக முசாஷி கருதப்படுகிறது.
தனக்குச் சொந்தமான அகழ்வாராய்ச்சி அணி இந்த கப்பலைக் கண்டுபிடித்திருப்பதாக ஆலன் கூறியிருக்கிறார்.
பிலிப்பைன்ஸிற்கு அருகில் உள்ள சிபுயான் கடலில் ஒரு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ஆழத்தில் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூழ்கடிக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முசாஷி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
முசாஷியும் அதனுடைய துணைக் கப்பலான யமாடோவும்தான் இதுவரை கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலேயே மிகப் பெரியவை.
லெய்ட் வளைகுடா யுத்தத்தின்போது, 1944ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று அமெரிக்க யுத்த விமானங்கள் முசாஷியை மூழ்கடித்தன.
இரண்டாவது உலகப் போரின் மிகப் பெரிய கடல் யுத்தம் இது என வர்ணிக்கப்படுகிறது.
சிறு பையனாக இருந்த காலத்திலிருந்தே இரண்டாவது உலகப் போர் வரலாறு தன்னை ஈர்த்துவந்ததாகக் கூறியிருக்கும் ஆலன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கப்பலைத் தேடும் பணியைத் துவங்கினார்.
தானாக கடலடியில் இயங்கக்கூடிய வாகனத்தின் மூலம் பிலிப்பைன் தீவுக்கூட்டத்தின் மத்தியில் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிது. கடலடியை முழுமையாக ஆய்வு செய்தபிறகு ஆலனின் ஆய்வுக் குழுவினர் இந்தப் பணியில் இறங்கினர்.
கடலடியில் ஒரு கிலோ மீட்டருக்குமே மேற்பட்ட ஆழத்தில் மூழ்கியிருக்கும் முசாஷியின் வால்வுகளில் ஒன்று.
முசாஷியின் துணைக் கப்பலான யமாடோ, இந்த யுத்தத்தில் சேதமடைந்தது என்றாலும், ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒகினாவாவுக்குச் செல்ல முயற்சித்தபோது, மூழ்கடிக்கப்பட்டது.
முசாஷி கப்பலின் இறுதி நாட்களில் அந்தக் கப்பல் மீது தொடர்ச்சியாக அமெரிக்க விமானங்கள் தாக்குல் நடத்தின.
போதுமான அளவு விமானப் படை பாதுகாப்பு இல்லாத நிலையில், சக்தி வாய்ந்த கப்பலாக இருந்தாலும்கூட முசாஷி மூழ்கடிக்கப்பட்டது.
மூழ்கிக்கிடந்த முசாஷியை தன் சொந்த முயற்சியில் கண்டுபிடித்திருக்கும் கோடீஸ்வரர் ஆலன், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு பிற்பகல் வேலையில் இந்தக் கப்பல் மீதான தாக்குதல் முடிவடைந்தது. அப்போது, 20 டார்பீடோ வகை குண்டுகளாலும் 17 பீரங்கிக் குண்டுகளாலும் கப்பல் தாக்கப்பட்டிருந்தது.
மாலை மயங்க ஆரம்பித்தபோது, கப்பல் மூழ்க ஆரம்பித்தது. அதிலிருந்த வீரர்களில் 1,000 பேர் உயிரிழந்தனர்.
சியாட்டிலில் பிறந்த ஆலன், 1975ல் பில் கேட்சுடன் இணைந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் துவங்கினார். உலகில் 51வது பணக்கார மனிதராக தற்போது ஆலன் கருதப்படுகிறார். அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 11.4 பில்லியன் பவுண்டுகள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியிருக்கிறது

Related

உலகம் 1718966796955655819

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item