மெக்ஸிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

ஒமர் ட்ரெவினோவை அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தேடிவந்தன. மெக்ஸிகோ நாட்டின் மிக மோசமான போதைப் பொருள் கும்பல்களில் ஒன்றான ஜெடாஸின் தல...

ஒமர் ட்ரெவினோவை அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தேடிவந்தன.

மெக்ஸிகோ நாட்டின் மிக மோசமான போதைப் பொருள் கும்பல்களில் ஒன்றான ஜெடாஸின் தலைவன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸீ - 42 என்று அறியப்படும் ஒமர் ட்ரெவினோ மொரலே, புதன் கிழமையன்று மெக்ஸிகோவின் வடக்கு மாகாணமான நுவோ லியோனின் மோன்டெர்ரே நகரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இவருடைய சகோதரனான மிகெய்ல் 2013ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டதிலிருந்து மொரலே இந்தக் கும்பலை நடத்திவருகிறார்.
மற்றொரு மிகப் பெரிய போதைப் பொருள் கும்பல் தலைவனான செர்வாண்டோ லா டுடா கோம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குள் மொரலே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
நைட்ஸ் டெம்ப்ளர் என்ற குழுவுக்கு கோம்ஸ் தலைவராக இருந்தார்.
போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்காக ஒமர் ட்ரெவினோ மொரலே மெக்ஸிகோவிலும் அமெரிக்காவிலும் தேடப்பட்டுவந்தார்.
மோன்டெர்ரே நகரின் புறநகர்ப் பகுதியான சான் பெத்ரோ கார்ஸா கார்ஸியாவில் ஒமர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மெக்ஸிக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கல்ஃப் கார்ட்டெல் என மிகச் சக்தி வாய்ந்த கிரிமினல் கும்பலின் அடியாள் கும்பலாக 1990களில் ஜெடாஸ் துவங்கப்பட்டது.
உயர்ரக ராணுவப் பிரிவிலிருந்து வெளியேறிவந்தவர்கள் நிரம்பிய இந்தக் குழு, இதன் கொடூரச் செயல்பாடுகளுக்குப் பெயர் போனது.
2011ஆம் ஆண்டில், மோன்டெர்ரே காஸினோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெட்டாஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2012ஆம் ஆண்டில் இந்தக் குழுவின் முன்னாள் தலைவர் ஹெரிபெர்டோ லஸ்கானோ கொல்லப்பட்டது, 2013ல் மிகெய்ல் ஏஞ்சல் ட்ரெவினோ மொராலே கைது செய்யப்பட்டது ஆகிய காரணங்களால் இந்தக் கும்பல் பலவீனமடைந்திருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related

மைத்திரியும் ரணிலும் மோதல்! பரபரப்பாகும் கொழும்பு

சிறிலங்காவில் கூட்டணி அமைந்து ஆட்சியை பிடித்துள்ள மைத்திரிபாலவும் ரணிலும் அரசியல் களத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.   நிறைவேற்று ஜனாதிபதி முறை...

சீன நீர்மூழ்கி கப்பல் வருகையை அனுமதிக்க முடியாது: இலங்கை அரசு திட்டவட்டம்

சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தங்கள் நாட்டுக்கு வருவதை மீண்டும் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனவின் சீன பயணத்திற்கான செயல் திட்டங்கள் வகுப்பத...

ஜானாதிபதியின் உத்தியோகபூர்வ வீட்டின் நீர்க்கட்டணம் ;அதிர்ச்சியில் மகிந்த வட்டாரம்

கடந்த வருடம் 2014 நவம்பர் மாதம் 13 இலட்சத்து இருபத்து நான்காயிரத்து இருநூற்று இருபத்து ஆறு ரூபாய் இருபத்து ஆறு சதமாகவும் (ரூ.1,324,226.26) அத்தோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 இலட்சத்து முப்பத்து ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item