சிங்கள -முஸ்லிம் இடையே இனமோதலை ஏற்படுத்த சூழச்சி!
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_20.html
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அதிருப்தி அடைந்தள்ள மஹிந்த தரப்பு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த சூழ்ச்சி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள - முஸ்லிம் மக்களிடையே இனவெறியை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
களுத்துரை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு எதிராக சிங்கள முஸ்லிம் மக்களை மோத வைப்பதற்கான நுட்பமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுக்கதைகள் ஊடாக ஆரம்பித்திருக்கும் இந்நடவடிக்கைகளுக்கமைய மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வரவில்லை என்றால் இப்பிரதேசங்கள் முஸ்லிம் மக்களின் கீழ் இயங்கும் என்ற பயத்தினை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கோத்தபாய ராஜபக்ச, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதற்கு இனவெறியை பரப்புகின்ற தேரர்கள் சிலரும் இதற்கு ஆதரவு வழங்குவதாக கூறப்படுகின்றது.
அண்மையில் வெளியான தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியே முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் விரக்தியடைந்துள்ள கட்சிக்காரர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இதனால் சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.