தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட மஹிந்த!
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக கொழும்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_21.html
![]() | |
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலின் பின்னர் கௌரவமான முறையில் அரசியலிலிருந்து மஹிந்த ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மஹிந்தவின் இந்த முடிவினால் அதிருப்பதி அடைந்துள்ள கட்சி உறுப்பினர்கள் அது குறித்து விளக்கம் கோரியுள்ளனர்.
விசேடமாக இத்தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் முன்னணி தலைவர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளாது, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய தங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றவகையில் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மஹிந்த தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகளினால் முன்னணியில் அவரை ஓரங்கட்டவுள்ளதாக முன்னணி சிரேஷ்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மஹிந்தவின் இவ்வாறான தீர்மானத்தினால் முன்னணியிலுள்ள அவரது ஆதரவாளர்கள் மன வருத்தத்துடன் இருப்பதானவும், தங்களின் கேள்விகளுக்கு அவரால் ஒரு திட்டவட்டமான பதிலை வழங்க முடியாதுள்ளமையினால் தங்களுக்கு அசௌகரியமாக உள்ளதாக மஹிந்த தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலைமையினால் முன்னணியின் தேர்தல் பிரச்சாரம் நடவடிக்கைகள் பாதிப்பேற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்செய்திகள் போலியானவை என கட்சிகாரர்களிடம் கூற முடியும். எனினும் இச்செய்திகள் உண்மை என்பது தெரியவந்து விட்டால் மீண்டும் அவரால் அவர்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் எனவும் அறிவித்துள்ளனர்.
அவரது கட்சிகாரர்கள் இது தொடர்பில் தெளிவான கருத்தினை மக்கள் முன் அறிவிக்க வேண்டும் என அவர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்
|



Sri Lanka Rupee Exchange Rate