மஹிந்த குடும்பத்தை கூண்டோடு சிறையில் அடைக்க முடியும்! ரணில்!!

 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களையே சிறையில் அடைத்திருக்க முடியும் என்று...

 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களையே சிறையில் அடைத்திருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

நாம், சட்டத்தின் பிரகாரமே நடப்போம். இவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருந்தேன்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளது,

மத்திய வங்கியின் ஆளுநர் பிழைகளை செய்யவில்லை என்பது விசாரணை குழுவினால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் மருமகனுக்கு நேரடியாகத் தொடர்புடைய நிறுவனமான பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார் நிறுவனம், மத்திய வங்கியிடமிருந்து எவ்வாறு பணம் பெற்றுகொள்ள முடியும் என்பது தொடர்பிலும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏவ்வாறாயினும் பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார்  நிறுவனத்தின் பணிப்பாளர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நிவாட் கப்ராலின் சகோதரி என்று தெரியவந்திருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

Related

தலைப்பு செய்தி 4898967600550392008

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item