நான் பிரதமரானால் சிறையில் இடப்பற்றாக்குறை ஏற்படும்!- மஹிந்த அச்சுறுத்தல்!
அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_984.html
நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது குழுவை நம்ப முடியாது. இவர்கள் அனைவரும் நல்லாட்சி குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாது.
எங்கிருந்தாவது யுத்தம் செய்வர். அந்த மக்களின் கோபம் நியாயமானது. நமது மாகாண அமைச்சர் டி.வி.உபுல் சத்தமிட்டு சொன்னது அதைதான்.
நான் பிரதமராகும் வரைக்கும் நூறு உபுல்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நான் பழிவாங்க மாட்டேன் அதேபோல் பழிவாங்குபவர்களை தடுக்கவும் மாட்டேன்.
இலங்கை தேசிய பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரிடம் மஹிந்த இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் தற்போதைய நாட்டு நிலை குறித்து பத்திரிகை ஆசிரியர் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ச,
எங்கள் கையாலும் சிறு சிறு பிழைகள் நடந்தன. நான் இல்லை என்று சொல்லவில்லை.
அந்த பிழைகளுக்கு ராஜித, சம்பிக்க மாத்திரமல்ல மைத்திரியும் 75% பொறுப்பு கூற வேண்டும்.
பல வருடங்களாக எனக்கு எதிராக போராடியவர்கள் போல இவர்கள் இப்போது பேசுகின்றனர்.
என்னை நோக்கி ஒரு விரல் நீட்டும் போது அவர்களை நோக்கி நான்கு விரல்கள் நீட்டப்படும்.
நான் இவர்களுக்கு சொல்கிறேன், பாறை மீது சமருக்குத் தயாராகவும். தேர்தலில் தோற்றால் அவர்களுக்கே பார்த்துக் கொள்ள முடியும், என்னுடைய குழுவினர் எவ்வளவு கோபத்தில் உள்ளார்கள் என்று, என மஹிந்த எச்சரித்துள்ளார்.