கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்ற விவகாரம்: பகீர் வீடியோவை வெளியிட்ட பொலிஸ்

அமெரிக்காவில் கறுப்பின நபரை பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக பொலிசார் இரண்டாவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் தெற...

dashcam_video_002
அமெரிக்காவில் கறுப்பின நபரை பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக பொலிசார் இரண்டாவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில்(South Carolina) உள்ள சார்லஸ்டன்(Charleston) பகுதியில் நேற்று முன் தினம்,மைக்கல் ஸ்லேகர்(Michael Slager Age-33) என்ற அமெரிக்க பொலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுருந்தார்.
அப்போது அங்குவந்த வோல்டர் ஸ்கோட்(Walter Scott Age-50) என்ற கறுப்பின நபரிடம் விசாரணை செய்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவரிடமிருந்து தப்பி ஓடிய ஸ்கோட்டை, மைக்கல் ஸ்லேகர் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
சுமார் 5 குண்டுகள் துளைத்தெடுத்த ஸ்கோட், அதே இடத்தில் துடித்துடித்து இறந்துள்ளார்.
இந்த சம்பவத்தை Feidin Santana என்ற நபர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் உயர் அதிகாரிகளிடம், தனது தற்காப்பிற்காக தான் அவரை சுட்டு கொன்றதாக மைக்கல் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் தெரிந்து கொண்ட Feidin Santana இது தற்காப்பிற்காக நடத்தப்பட்ட கொலை அல்ல என கூறி அந்த வீடியோவை வெளியிட்டார்.
இதனை பார்த்த உயர் அதிகாரிகள், மைக்கல் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மைக்கல் பொலிஸ் வாகனத்தில் உள்ள கமெராவில் சில காட்சிகள் பதிவாகியுள்ளன.அதை பொலிசார் நேற்று வெளியிட்டனர்.
அந்த வீடியோவில், ஸ்கோட் ஓட்டிச்சென்ற காரின் பின்புற விளக்கு உடைந்திருந்ததால் அவரை பின் தொடர்ந்து காரை நிறுத்தி வாகன உரிமம் மற்றும் பிற ஆவணங்களை காட்டுமாரு கேட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, மைக்கல் தனது பொலிஸ் வாகனத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.
சிறிது நேரம் காரிலேயே இருந்த ஸ்கோட், திடீரென காரின் கதவை திறந்துக்கொண்டு ஒரு பூங்காவை நோக்கி வேகமாக ஓடுகிறார்.
இதற்கு பிறகு தான், ஸ்கோட்டை பின் தொடர்ந்து சென்ற மைக்கல், அவரை பூங்காவில் வைத்து சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார்.
இது இனவெறி காரணமாக செய்யப்பட்ட கொலை என கூறியுள்ள ஸ்கோட்டின் குடும்பத்தினர், பொலிஸ் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளையின பொலிசின் வெறித்தனம்: கறுப்பினத்தவரை ஓடஓட சுட்டுக் கொன்ற கொடூரம்

Share this post:


Related

உலகம் 3816588510094956733

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item