கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளன
கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதால் 800 ற்கும் அதிகமான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாத...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_27.html
கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதால் 800 ற்கும் அதிகமான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நோயாளர்களில் தீவிர பாதிப்புக்குள்ளானவர்களும் இருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்த சிகிச்சை பிரிவில் மூன்று விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் நாளாந்தம் சேவையாற்றி வருகின்ற போதிலும், உரிய வசதிகள் காணப்படாத காரணத்தினால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தடையேற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சிகிச்சைக் கூடங்கள், உபகரணங்கள் மற்றும் ஆளணி வசதிகள் போன்றவை உரியவாறு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, சத்திரசிகிச்சைப் பிரிவில் கடந்த நாட்களில் காணப்பட்ட குறைபாடுகள் தற்போது பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன், ஏனைய தேவைகளையும் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.