மகிந்தவுக்கு ஏமாற்றம் ;உறுப்பினர்களின் ஆதரவு வாபஸ்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் தமது ஆதரவை மீளப் பெ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_617.html
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் தமது ஆதரவை மீளப் பெற்று கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பலர் மகிந்தவுக்கு அதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.
எனினும் இந்த குழு தமக்குள் ஒரு பிரிவனைவாதத்தை ஏற்படுத்திக்கொண்டு தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களில் பலர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும் எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக களமிறக்க போவதில்லை என தெரியவந்ததையடுத்தே, குறித்த உறுப்பினர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.