40 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக வெடித்துச் சிதறிய சிலியின் கல்புக்கோ எரிமலை!
40 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக சிலியில் அமைந்துள்ள உயிர் எரிமலையான கல்புக்கோ சீற்றமடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த க...
http://kandyskynews.blogspot.com/2015/04/40_24.html
40 வருடங்களுக்குப் பின் முதன் முறையாக சிலியில் அமைந்துள்ள உயிர் எரிமலையான கல்புக்கோ சீற்றமடைந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த கல்புக்கா எரிமலை இரு முறை வெடித்துச் சிதறியதாக அந்நாட்டின் தேசிய புவியியல் மற்றும் சுரங்க சேவை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த எரிமலை சீற்றத்தால் தென் சிலியின் பிரபல சுற்றுலாப் பிரதேசங்களான புவெர்ட்டோ மொண்ட் மற்றும் புவெர்ட்டோ வராஸ் நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது. எரிமலையின் மையப் பகுதியைச் சுற்றி 20 Km சுற்றளவுக்கு ஆபத்து மண்டலமாக அறிவிக்கப் பட்டு சுமார் 1500 மக்களை இராணுவமும் போலிசாரும் இணைந்து வெளியேற்றியுள்ளதாக உள்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட முதலாவது வெடிப்பின் பின் கல்புக்கோ எரிமலை வானில் பல நூறு அடிகளுக்கு கக்கிய புகை மற்றும் சாம்பலின் காரணமாக குறித்த நகரங்களில் வசித்து வரும் மக்களிடையே சிறிது கலக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதாவது ஆரம்பத்தில் வானில் வண்ண மயமாகத் தோன்றிய கரும் சாம்பல் கண்ணைக் கவருதாக இருந்த போதும் உடனடியாகப் பொது மக்கள் பதற்றம் அடைந்ததால் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கள் நிரம்பி வழிந்தும் பலர் தண்ணீர்ப் போத்தல்களைக் கொள்வனவு செய்ததுடன் வங்கி ஏடிஎம் களில் இருந்து பணம் பெறுபவர்கள் கூட்டமும் சடுதியாக அதிகரித்ததாகவும் குடிமகன் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கல்புக்கோ எரிமலை 1962 ஆம் ஆண்டே வெடித்துச் சிதறியிருந்தது குறிப்பிடத்தக்கது.