5 மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கிய ரொனால்டோ
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 கோடி ரூபாய் நித...
http://kandyskynews.blogspot.com/2015/05/5.html
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு வாசல்களை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. நிலநடுக்கத்தில் நிலைகுலைந்து போன நேபாளத்தை புனரமைக்கும் பணிக்கு உலக நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 மில்லியன் பவுண்டு நிதியுதவியாக அளித்துள்ளார்.
குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் save the children என்ற அமைப்பின் மூலம் இந்த தொகை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரும். குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.
நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யுமாறு ரொனால்டோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டுக் கொண்டதன் மூலமாகவும் அவரது ரசிகர்கள் நேபாள நாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ ஸ்பெயினை சேர்ந்த ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதற்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ உலகிலேயே விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 80 மில்லியன் யூரோ ஆகும்.
|