பாகிஸ்தானில் அமெரிக்க சிஐஏ டிரோன் தாக்குதலில் தவறுதலாக இரு பிணைக் கைதிகள் பலி!
பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க சிஐஏ புலனாய்வு அமைப்பின் ஆளில்லா விமானமான டிரோன் மேற்கொண்ட தாக்குதலில் ஓர் அமெரிக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_750.html
பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க சிஐஏ புலனாய்வு அமைப்பின் ஆளில்லா விமானமான டிரோன் மேற்கொண்ட தாக்குதலில் ஓர் அமெரிக்கர் உட்பட இரு பிணைக் கைதிகள் தவறுதலாகக் கொல்லப் பட்டமை ஊர்ஜிதம் ஆகியிருப்பதாக இன்று வியாழக்கிழமை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
கொல்லப் பட்ட இரு பிணைக் கைதிகளில் ஒருவர் அமெரிக்கரான வாரென் வெயின்ஸ்டெயின் என்றும் மற்றவர் இத்தாலிய நாட்டவரான ஜோவனி லோ போர்ட்டோ என்றும் அடையாளம் காணப் பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அல்கொய்தா இலக்குகள் மீது அமெரிக்க டிரோன் விமானங்களால் நடத்தப் பட்டு வரும் தாக்குதல்களுக்கு தலைமைக் கமாண்டராக செயற்படுபவர் என்ற முறையில் இவ்விருவரது மரணத்துக்கும் அமெரிக்க அரசு சார்பாக மன்னிப்புக் கேட்பதாகவும் ஒபாமா தெரிவித்திருந்தார். இதேவேளை குறித்த அதே பகுதியில் நடத்தப் பட்ட டிரோன் தாக்குதல்களில் அல்கொய்தா இயக்க உறுப்பினர்களாக இருந்த இரு அமெரிக்க குடிமகன்களும் கொல்லப் பட்டதாகவும் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டிரோன் தாக்குதலில் தவறுதலாகக் கொல்லப் பட்ட இரு பிணைக் கைதிகளும் தொண்டூழியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.